×

ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கம்

கோவை, ஜூலை 2: கோவை  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி திறந்து வைத்தார். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பற்றி கல்லூரி முதல்வர் அலமேலு கூறுகையில்,“இது தற்கால தொழில் நிறுவங்களின் தேவைகள், நிபுணத்துவம் மற்றும் திறன் ஆகியவை ஒரு பார்வையுடன் உற்பத்தியை செயல்படுத்தி சிறந்த தீர்வை உருவாக்கும் நோக்கில் எனேபிளிங் மேனுபேக்ட்ரிங் வித் எ விஷன் எனும் மோட்டோவை கொண்டு தொடங்கப்பட்டு உள்ளது.

புதிதாக அமைந்திருக்கும் இயந்திரத்தை பற்றி குறிப்பிடும் போது பல்வேறு கருவிகளின் பாகங்களை முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்ட மாதிரிகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு பல்வேறு விதமான கோணங்களில்ஆய்வு செய்து, விடுபட்ட அம்சங்களை கண்டறிந்து அவற்றை சுட்டிக்காட்டும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார். கல்லூரியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் தொழில்நுட்பத் துறையை சார்ந்த பேராசிரியர் ரஞ்சித் குமார், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்த கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களான சந்தோஷ், அருண் மற்றும் முன்னாள் மாணவர் கரண் முயற்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதை நிர்வாக அறங்காவலர் பாராட்டினார். விழாவிற்கு கல்லூரியின் தொழில்துறை தலைவர் கணேஷ், ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் இயக்குநர் வனிதா, துணை முதல்வர் கருப்பசாமி, பல்வேறு துறை தலைவர்கள், அட்நா ஆட்டோமேஷன், சக்தி ஆட்டோஅன்சில்லரி , எல்.அண்ட்.டி டிபென்ஸ் நிறுவனக்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramakrishna College of Engineering ,Coimbatore ,Artispec Technologies ,Ramakrishna College of Engineering Spark Incubation Center… ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...